/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துவக்கப்பள்ளியில் மழலையர் செயல்பாட்டு அறை திறப்பு
/
துவக்கப்பள்ளியில் மழலையர் செயல்பாட்டு அறை திறப்பு
ADDED : ஜூலை 25, 2024 05:47 AM

புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் முன் மழலையர் செயல்பாட்டு அறை திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை சார்பில், முன் மழலையர் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மழலையர் பள்ளிகளில் செயல்பாட்டு அறை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக பள்ளி ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நகரப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள முன் மழலையர் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள், பொம்மைகள் வாங்கி அமைத்து, செயல்பாட்டு அறைகள் திறக்கப்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதில், பாக்கமுடையான்பட்டு அரசு துவக்கப்பள்ளியில் மழலையர் பள்ளியில், செயல்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது.
மழலையர் செயல்பாட்டு அறையை, பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், 40க்கும் மேற்பட்ட மழலையர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.