/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறை அருகே மொபைல் சிக்னல் அலைவரிசை அதிகரித்தால் கடும் நடவடிக்கை சிறைத்துறை ஐ.ஜி., எச்சரிக்கை

ADDED : ஜூலை 25, 2024 05:47 AM

புதுச்சேரி: காலாப்பட்டு சிறை அருகே மொபைல்போன் சிக்னல் அலைவரிசையை உயர்த்தினால் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஜி., ரவிதீப்சிங்சாகர் எச்சரித்தார்.
காலாப்பட்டு மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன், போலீசார் மேற்கொண்ட சோதனையில் 2 மொபைல் போன்கள், 3 சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கவர்னர் மற்றும் தலைமை செயலர் ஆகியோர், சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகரை தொடர்பு கொண்டு, சிறையில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டும், எவ்வாறு மொபைல் போன் சிக்னல் கிடைக்கிறது எனவும், அதை சரிசெய்யுமாறு அறிவுறுத்தினர்.
காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் மொபைல்போன் நெட்வொர்க் நிறுவன அதிகாரிகளுடன் தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் மொபைல் சிக்னல்களை பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, காலாப்பட்டு சிறையில் துறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங்சாகர் தலைமையில் அனைத்து மொபைல்போன் நெட்வொர்க் நிறுவனத்தினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகர் பேசுகையில், 'மொபைல்போன் சிக்னல்களை தடுக்கும் ஜாமர் கருவி பொருத்தியும், எவ்வாறு சிறைக்குள் சிக்னல் வருகிறது. சிறையில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும், இதுபோன்ற பிரச்னையால் சிறைத்துறைக்கு அவபெயர் ஏற்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றமும், புதுச்சேரி அரசும் சிறையில் மொபைல்போன் சிக்னல் கிடைக்காத வகையில் ஏற்பாடு செய்ய மொபைல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனை மீறி மொைபல் போன் சிக்னல் அலைவரிசையை அதிகப்படுத்தும் மொபைல்போன் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாப்பட்டு மற்றும் சுனாமி குடியிருப்பு மக்களை பாதிக்காத வகையில் மொபைல் அலைவரிசைகள் இருக்க வேண்டும் என கூறினார்.