/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.சி.டி.வி., பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
/
சி.சி.டி.வி., பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 10, 2024 06:58 AM
அரியாங்குப்பம் : குற்றங்களை தடுக்க தனியார் நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரியில் முக்கிய இடங்கள், சாலைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துப்பட்டு, போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து குற்றங்கள் நடப்பதை கண்காணித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், அனைத்து கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அரியாங்குப்பம் போலீசார் வியாபாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும், மேலும் குற்றவாளிகளை சுலபமாக கண்டு பிடிக்கு முடியும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.