ADDED : ஜூன் 09, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : சோரப்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 3ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவாக, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்வாக, மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.