/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது
/
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது
ADDED : ஜூன் 09, 2024 02:40 AM

வானுார் : வானுார் அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த மொரட்டாண்டி காட்டுப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில் வனவர் கோகுலலட்சுமி, நேற்று முன்தினம் இரவு மொரட்டாண்டி காட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். புதுச்சேரி, ஒதியம்பட்டு கே.வி.நகர் செல்வராஜ் மகன் மணிமாறன்,30; தங்கராஜ் மகன் பார்த்திபன்,30; ஆகிய இருவரும் இரவில் காட்டில் முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி, விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதையடுத்து, இருவரையும் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்து, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.