/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 09, 2024 02:37 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் இருந்து துாத்துக்குடிக்கு 10 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், 7 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், நாச்சான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜசுந்தரபாண்டி,27; துாத்துக்குடி மாவட்டம், அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித்,28; ஆகிய இருவரும் ஆந்திரா மாநிலம், பெராம்பூரில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, விழுப்புரத்தில் இருந்து பஸ் மூலம் துாத்துக்குடிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.