/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 100.8 டிகிரி வெயில்
/
புதுச்சேரியில் 100.8 டிகிரி வெயில்
ADDED : ஜூன் 07, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று 100.8 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.
இந்த ஆண்டு, கோடைக்காலம் துவக்கத்தில் இருந்து விட்டு, விட்டு மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் அன்றே மழை பெய்தது. இந்நிலையில் கோடைக் காலத்தில், அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவானது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும், புதுச்சேரியில், நேற்று 100.8 டிகிரி வெயில் பதிவானது. அதனால், சாலையில் வெப்பக்காற்று வீசியது. மக்கள் கடும் அவதிப்பட்டனர்.