/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதவியாளர் பணிக்கு தேர்வு 28 மையங்களில் 10,416 பேர் பங்கேற்பு
/
உதவியாளர் பணிக்கு தேர்வு 28 மையங்களில் 10,416 பேர் பங்கேற்பு
உதவியாளர் பணிக்கு தேர்வு 28 மையங்களில் 10,416 பேர் பங்கேற்பு
உதவியாளர் பணிக்கு தேர்வு 28 மையங்களில் 10,416 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 23, 2025 05:11 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், 28 மையங்களில் நடந்த உதவியாளர் பணிக்கு, இரண்டாம் நிலை எழுத்து தேர்வை, 10 ஆயிரத்து 416 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருந்த துறையில் 256 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 27ம் தேதி நடந்தது.
இத்தேர்வுக்கு, 32 ஆயிரத்து 830 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 22 ஆயிரத்து 860 பேர் தேர்வை எழுதினர். 9 ஆயிரத்து 970 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
இந்தேர்வின் முடிவு கடந்த ஏப்ரல் 30ம் தேதி வெளியானது.
இதில் இரண்டாம் நிலை தேர்வுக்கு 10 ஆயிரத்து 766 பேர் தகுதி பெற்றனர். அதை தொடர்ந்து, இரண்டாம் நிலை எழுத்து தேர்வு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது.
இந்த தேர்வு புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி உட்பட 22 மையங்களிலும், காரைக்காலில் 3, மாகில் 1, ஏனாமில், 2 மையங்கள் என மொத்தம் 28 மையங்களில் நடந்த இந்த தேர்வை, 10 ஆயிரத்து 416 பேர் தேர்வு எழுதினர். 350 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.தேர்வு மையங்களை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா, உதவி அதிகாரி கண்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.