/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்விரோத தகராறில் வாலிபரை வெட்டிய 5 பேர் கைது
/
முன்விரோத தகராறில் வாலிபரை வெட்டிய 5 பேர் கைது
ADDED : மே 28, 2025 07:10 AM

புதுச்சேரி : வாலிபரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ஆலங்குப்பம் அன்னை நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியன், 22; சுப நிகழ்ச்சிகளுக்கு டெக்ரேஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது முன்னாள் நண்பரான திலாஸ்பேட்டை, வீமன் நகர் மணிகண்டன் என்பவருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபிரியன் ஆலங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் நின்றிருந்தார். இதையறிந்த மணிகண்டன், தனது நண்பர்களான வீமன் நகரை சேர்ந்த வினோத், ரஞ்சித், சந்துரு உள்ளிட்ட 6 பேருடன், அங்கு சென்று கத்தியால் ஸ்ரீபிரியனை வெட்டினார்.
ஸ்ரீபிரியன் சத்தம் போட்டதால், பொது மக்கள் அங்கு திரண்டனர். இதனால், மணிகண்டன் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் அடைந்த ஸ்ரீபிரியன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்ரீபிரியன் அளித்த புகாரின் பேரில், தன்வந்தரி போலீசார் வழக்குப் பதிந்து, திலாஸ்பேட்டை வீமன் நகரை சேர்ந்த மணிகண்டன், 20; வினோத், 20; ரஞ்சித்குமார், 19; சண்முகாபுரம் சந்துரு, 19 மற்றும் சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.