/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பசுமை விருதுக்கு தொழிற்சாலை தேர்வு
/
பசுமை விருதுக்கு தொழிற்சாலை தேர்வு
ADDED : மே 28, 2025 07:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் மூலம் பசுமை விருதுக்கான தொழிற்சாலை தேர்வு செய்யும் பணி நடந்தது.
புதுச்சேரி மாசுக்கட்டுப் பாட்டு குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பசுமை விருதுகள் அறிவித்தது.
இந்த விருதினை பெருவதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து பல தொழிற்சாலைகள் விண்ணப்பித்திருந்தன.
இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு லாஸ்பேட்டை, அப்துல்கலாம் அறிவியல் கூடத்தில் நேற்று நடந்தது.
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ், தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் சரவணன், சீனுவாசன், பழனிவேல், தொழிலாளர் துறையின் தொழிற்சாலை ஆய்வாளர் ஞானவேலு, தொழில் துறையின், தொழில் நுட்ப அதிகாரி செந்தில் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் விஞ்ஞானி சுமதி ஆகியோர் கலந்து கொண்டு, விருதுக்கான தொழிற்சாலையை தேர்ந்தெடுத்தனர்.
தேர்வு செய்த தொழிற்சாலைக்கு வரும் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பசுமை விருதுகள் வழங்கப்படுகிறது.