/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.1.32 லட்சம் மோசடி
/
பெண்கள் உட்பட 6 பேரிடம் ரூ.1.32 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 05, 2025 06:46 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1.32 லட்சம் இழந்துள்ளார்.
முத்திரையார்பாளையத்தை சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன் தருவதாக தெரிவித்துள்ளார். கடன் பெற செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பி, அந்த பெண் 35 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் 41 ஆயிரத்து 500, அரியூரை சேர்ந்த பெண் 29 ஆயிரத்து 271, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 11 ஆயிரம், கதிர்காமத்தை சேர்ந்த நபர் 2 ஆயிரத்து 400, வில்லியனுாரை சேர்ந்த பெண் 12 ஆயிரத்து 399 என, 4 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 70 ரூபாய் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.