/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்
/
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கல்
ADDED : ஜூலை 05, 2025 06:46 AM
புதுச்சேரி : துப்புரவு தொழிலாளர்கள் 243 பேருக்கு, பாதுகாப்பு உபகரணங்களை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், தேசிய துாய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இணைந்து தேசிய இயந்திர மயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் நடவடிக்கை திட்டம், கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் துாய்மை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 243 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது. முதல்வர் ரங்கசாமி, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல், துணை இயக்குநர் சவுந்திரராஜன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.