/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து
/
நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து
ADDED : செப் 17, 2025 03:44 AM

காரைக்கால் : காரைக்காலில் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களை கலெக்டர் ரவிபிரகாஷ் வாழ்த்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, 2025ம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது.
அதில், திருபட்டினம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை அன்புச்செல்வி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ரஹ்மத்நிஷா முதல்வரின் சிறப்பு விருதும், வடமறைக்காடு காமராஜர் அரசு பள்ளி ஆசிரியர் பிரதாப் மற்றும் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் விஸ்வேஸ்வரமூர்த்தி ஆகியோர் கல்வி அமைச்சரின் பிராந்திய விருதுகளையும் பெற்றுள்ளனர்.
விருதுபெற்ற ஆசிரியர்கள் கலெக்டர் ரவி பிரகாைஷ மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதன்மை கல்வி அதிகாரி விஜய் மோகனா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.