/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாஜ., தலைவராகிறார் மாஜி எம்.எல்.ஏ.,
/
பாஜ., தலைவராகிறார் மாஜி எம்.எல்.ஏ.,
ADDED : ஜூன் 28, 2025 06:53 AM

புதுச்சேரி : புதுச்சேரி பாஜ., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
நாடு முழுதும் உள்ள மாநிலங்களில் மாநில தலைவர்களை புதிதாக மாற்றி அமைக்கும் பணியில் பாஜ., தேசிய தலைமை ஈடுபட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி பாஜ.,வில் புதிய தலைவரை நியமிப்பதில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்தது. அமைச்சர் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுச்சேரி எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பாஜ., அலுவலகத்தில் புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிறது. நாளை மனு தாக்கல், நாளை மறுநாள் புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகிறது. இந்த தலைவர் போட்டியில் மூன்று பேர் போட்டியிடுவதாகவும், முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என, தகவல்கள் வெளியாகி உள்ளது.