/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகரிக்கும் சட்டவிரோத 'ஸ்பா'க்கள், மசாஜ் கிளப்புகள் போலீசாரின் கண்காணிப்பு தேவை
/
அதிகரிக்கும் சட்டவிரோத 'ஸ்பா'க்கள், மசாஜ் கிளப்புகள் போலீசாரின் கண்காணிப்பு தேவை
அதிகரிக்கும் சட்டவிரோத 'ஸ்பா'க்கள், மசாஜ் கிளப்புகள் போலீசாரின் கண்காணிப்பு தேவை
அதிகரிக்கும் சட்டவிரோத 'ஸ்பா'க்கள், மசாஜ் கிளப்புகள் போலீசாரின் கண்காணிப்பு தேவை
ADDED : பிப் 11, 2024 02:08 AM
புதுச்சேரி மாநிலத்திற்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டிற்கு 12 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சட்டவிரோதமான ஸ்பாக்களும், மசாஜ் கிளப்புகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பாலியல் தொழிலும் தங்குதடையின்றி நடக்கிறது.
இவை, வெளியூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தங்கி படிக்கின்ற மற்றும் வேலை செய்கின்ற அப்பாவி பெண்களை, சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றன.அவர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுபோல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும்,பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பெண்களை ஏமாற்றி துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்பாக்கள் உள்ளிட்ட புத்துணர்ச்சி மையங்களை நடத்த அதற்கான லைெசன்ஸ் மட்டுமின்றி படிப்புகளையும் முடித்து இருக்க வேண்டும். ஆனால் அது போன்று எந்த படிப்புகள் இன்றி பாலியல் தொழிலுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சட்ட விரோத புத்துணர்ச்சி மையங்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, பாலியல் தொழிலில் கட்டாயமாக தள்ளப்படும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் மறுவாழ்விற்கு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

