/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
/
புதுச்சேரி பல்கலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி பல்கலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி பல்கலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 25, 2025 05:15 AM
புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்பு களில் கியூட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.
கியூட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான சூழ்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் தற்போது விண்ணப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான வரும் 2025-26 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.பி.ஏ., நுாலக அறிவியல் (எம்.லிப்.,) எம்.எட்., எம்.பி.எட்., எம்.எஸ்.டபுள்யூ., தியேட்டர் ஆர்ட்ஸ், எம்.வி.ஏ., எல்.எல்.எம்., பி.ஜி., டிப்ளமோ படிப்புகளில் சேர கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் www.pondiuni.edu.in/admissions---2025-26 என்ற இணைய முகவரில் அடுத்த மாதம் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொது, ஓ.பி.சி., (என்.சி.எல்.,), இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கும் 100 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இம்மாணவர்கள் கூடுதல் படிப்புகளில் விண்ணப்பிக்க ஒவ்வொரு படிப்பிற்கும் 50 ரூபாய் செலுத்த வேண்டும். மாற்றுதிறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம், கூடுதல் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.