ADDED : மே 25, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் மக்கள் மன்றம் நடந்தது.
எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
சிவில், குடும்ப தகராறு உட்பட பல பிரச்னைகள் குறித்து மக்கள் மனு அளித்தனர்.
சிலர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தாலும், போலீசார் பாரபட்சமாக நடப்பதாக புகார் தெரிவித்தனர்.