/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை
/
15 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: 15 சவரன் செயின் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 25; இவரது கார் டிரைவர் பொன்மாறன். கடந்த 6 ம் தேதி பாலாஜியின் தாத்தா கலியபெருமாள் அறைக்கு சென்றபோது, அங்கிருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு, பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பாலாஜி அங்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 சவரன் செயின் திருடு போய் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.