/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் ஈஸ்வரன் நகரில், 14.65 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கான பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நோணாங்குப்பம் ஈஸ்வரன் நகரில், சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொகுதி மேம்பாட்டு நிதி 14.65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.