/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., தலைவருடன் மாநில அமைப்பாளர் சந்திப்பு
/
தி.மு.க., தலைவருடன் மாநில அமைப்பாளர் சந்திப்பு
ADDED : செப் 17, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவசர அழைப்பின் பேரில், மாநில அமைப்பாளர் சிவா, நேற்று சென்னை சென்று, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினனை சந்தித்து பேசினார்.
அப்போது, புதுச்சேரி மாநிலத்தின் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலவரம், மக்களின் எதிர்பார்ப்புகள், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தொகுதி செயலாளர் சக்திவேல் உடனிருந்தனர்.