நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டை, தாமரை நகரை சேர்ந்தவர் அல்லாபகஷ், 63; இவர் கடந்த 10ம் தேதி, வீட்டில் வெளியில் சென்றவர், திரும்ப வரவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அதே போல, தேங்காய்த்திட்டு, பாவேந்தர் நகரை சேர்ந்தவர் பெருமாள், 57, கடந்த 11ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீட்டுக்கு வரததால், சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த, புகார்களின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.