/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்
/
பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ்
ADDED : ஜூன் 27, 2025 11:08 PM

நியூயார்க்: அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ், சக வீரர் மன்னெபள்ளியை சந்தித்தார். முதல் செட்டை கைப்பற்றிய ஆயுஷ் (21-12), அடுத்த செட்டை நழுவவிட்டார் (13-21). பின் சுதாரித்த இவர் 3வது செட்டை (21-15) கைப்பற்றினார். முடிவில் ஆயுஷ் 21-12, 13-21, 21-15 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, தாய்லாந்தின் பிச்சமனை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தான்வி, 21-18, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி 17-21, 22-20, 13-21 என மலேசியாவின் லெட்சனாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் அன்மோல் கார்ப், 21-23, 10-21 என டென் மார்க்கின் லினேயிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அம்சகருணன், ரெத்தினசபாபதி ஜோடி 21-10, 21-17 என கனடாவின் லாஜ், யாகுரா ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.