/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
தேர்தலில் நிற்க அனுமதி கேட்டு விருந்தளித்த மளிகை கடைக்காரர்
/
தேர்தலில் நிற்க அனுமதி கேட்டு விருந்தளித்த மளிகை கடைக்காரர்
தேர்தலில் நிற்க அனுமதி கேட்டு விருந்தளித்த மளிகை கடைக்காரர்
தேர்தலில் நிற்க அனுமதி கேட்டு விருந்தளித்த மளிகை கடைக்காரர்
ADDED : ஜூன் 30, 2025 02:58 AM

தா.பழூர்: சட்டசபை தேர்தலில் போட்டியிட, மளிகை கடை உரிமையாளர் ஒருவர், 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து வைத்து, அனுமதி கேட்டார்.
அரியலுார் மாவட்டம், கீழமைக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 38; மளிகைக்கடைக்காரர். இவர், பொதுமக்கள் தேவையை நிறைவேற்றவும், கோரிக்கைகளுக்காக அதிகாரிகளால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கவும், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பினார்.
அதற்காக, உறவினர்கள், நண்பர்கள் உட்பட தா.பழூர் மற்றும் சுற்றி உள்ள 20 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, தா.பழூர் தனியார் திருமண மண்டப நிகழ்ச்சிக்கு, 300க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
விருந்து உபசரிப்புக்கு பின், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனுமதி கேட்டார். அங்கு கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும், 'சட்டசபை தேர்தலில் போட்டியிடுங்கள்' என கூறி வாழ்த்துகளை தெரிவித்தனர். தேர்தலில் நிற்க வேண்டும்' என ஆரத்தி எடுத்து, பெண்கள் வாழ்த்தினர்.