/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அத்திமனம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
அத்திமனம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
அத்திமனம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
அத்திமனம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2024 04:40 AM

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமனம் அகத்தீஸ்வரர் கோவில் குளம் முழுதும், ஆகாய தாமரை வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது.
குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. தண்ணீர் தெரியாத வண்ணம் ஆகாய தாமரை படர்ந்தும், புற்கள் வளர்ந்தும் உள்ளதால், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள புற்கள், ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும்.
குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற, துறை சார்ந்தஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.