/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மின் கம்பங்கள் கூடுவாஞ்சேரியில் அபாயம்
/
சேதமான மின் கம்பங்கள் கூடுவாஞ்சேரியில் அபாயம்
ADDED : ஜூன் 01, 2024 04:41 AM

கூடுவாஞ்சேரி, : நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, மஹாலட்சுமி நகர், ராஜிவ் காந்தி நகர், டிபன்ஸ் காலனி, ராணி அண்ணா நகர், கோவிந்தராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சில மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.
இப்பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மின் கம்பங்கள், சிமென்ட் சிலாப்புகள் உடைந்தும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும்,எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும்நிலையில் உள்ளன.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மிகவும் ஆபத்தான நிலையில், 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன.
சேதமான மின் கம்பங் களை, வரும் மழை காலத்திற்கு முன் மாற்றி,மின் விபத்துகள் ஏற்படாத வாறு பாதுகாக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.