/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி
/
கிராமப்புற ரேஷன் கடைகள் தாமதமாக திறப்பதால் அவதி
ADDED : ஜூலை 13, 2024 12:33 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர்ப்புற, கிராமப்புற பகுதி களில், முழுநேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டை தாரர்கள் வாங்குகின்றனர்.
கிராமப்புற ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரசு அறிவித்தநேரமான காலை 9:00 மணிக்கு திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து, வாயலுார் உய்யாலிகுப்பம் பகுதி வாசிகள் கூறியதாவது:
இங்குள்ள ரேஷன் கடை 11:30 மணிக்கு மேல் தான் திறக்கப்படுகிறது. இதனால்,வேலைக்கு செல்வோர் பொருட்கள் வாங்க முடிய வில்லை. மேலும்,எப்போது பொருட்கள் வழங்குகின்றனர் என்றும் தெரியவில்லை.
இவ்வாறு கூறினர்.