/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 22, 2025 02:04 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாகும்.
இந்த சாலையை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.
சிதிலமடைந்த இடங்களில், ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளதால், அவை தற்போது பெயர்ந்து, மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.