/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் நோய் தொற்று அபாயம்
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் நோய் தொற்று அபாயம்
பி.டி.ஓ., அலுவலகத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் நோய் தொற்று அபாயம்
பி.டி.ஓ., அலுவலகத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் நோய் தொற்று அபாயம்
ADDED : ஜூன் 22, 2025 02:06 AM

பவுஞ்சூர்:லத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டி நிரம்பி சாலையில் வழிந்து ஓடுவதால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
பவுஞ்சூர் பஜார் பகுதியில் லத்துார் பி.டி.ஓ., அலுவலக வளாகம் உள்ளது.
இந்த வளாகத்தில் குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி வள மையம் , வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பி.டி.ஓ., அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
அனைவரும் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுநீர் அகற்றப்படாமல் உள்ளது, இதனால் பி.டி.ஓ., அலுவலகத்தின் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்து சாலையில் பெருக்கெடுப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், பி.டி.ஓ., அலுவலகத்தில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.