/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்
/
காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்
காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்
காட்டாங்கொளத்துாரில் நடைபாலம் 'கிரேன்' உதவியுடன் பொருத்தம்
ADDED : ஜூன் 22, 2025 10:46 PM

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை, பெருங்களத்துார் -- செட்டிபுண்ணியம் வரை, எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
சாலை அகலப்படுத்தப்பட்டது முதல், பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியாமல், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.
இதற்கு தீர்வாக, உயர்மட்ட நடை பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்கள் கோரிக்கைகளை ஏற்று, ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், தைலாவரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இரும்பாலானா, உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் பேருந்து நிறுத்தம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நேற்று காலை, 61 மீட்டர் நீளம், 60 டன் எடை கொண்ட இரும்பு பாலம், இரண்டு ராட்சத 'கிரேன்' உதவியுடன் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
இதற்காக, காட்டாங்கொளத்துார் பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இருப்பினும், காட்டாங்கொளத்துார் ரயில்வே கேட் மூடப்பட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.