/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு
/
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு
ADDED : ஜூலை 05, 2025 01:02 AM

அச்சிறுபாக்கம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அபாய பள்ளங்களில், வாகனங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் அருகே உள்ள ஆத்துார் சுங்கச்சாவடி முதல், செங்கல்பட்டு பரனுார் சுங்கச்சாவடி வரை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையோரம் கிணறுகள் மற்றும் ஏரிகள் அதிக அளவில் உள்ளன.
நீர் வரத்து கால்வாய்கள், பாலங்கள், அபாயகரமான பள்ளங்கள் உள்ளன. இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளின் துாக்க கலக்கம் மற்றும் விபத்துகளின் போது, வாகனங்கள் சாலையில் இருந்து தடுமாறி, சாலையோரம் உள்ள பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, தடுப்புகள் அமைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையோரங்களில் துருப்பிடிக்காத இரும்பாலான கம்பிகளால், தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.