/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊட்டச்சத்து வேளாண்மை திட்டம் துவக்கம்
/
ஊட்டச்சத்து வேளாண்மை திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை திட்டம், துவக்கப்பட்டது.
தமிழகத்தில்,'ஊட்டச்சத்து வேளாண்மை' எனும் புதிய திட்டம், 2025-26ம் ஆண்டில், 125 கோடி ரூபாயில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் காய்கறி, பயறு வகைகள் விதை தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்பு நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று துவக்கினார்.
செங்கல்பட்டு, செய்யூர் அடுத்த திருவாதுார் கிராமத்தில், மாவட்ட கலெக்டர் சினேகா, விவசாயிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கினார்.