/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் நகராட்சியில் ஒளிராத பெயர்ப்பலகை விளக்கு
/
மறைமலை நகர் நகராட்சியில் ஒளிராத பெயர்ப்பலகை விளக்கு
மறைமலை நகர் நகராட்சியில் ஒளிராத பெயர்ப்பலகை விளக்கு
மறைமலை நகர் நகராட்சியில் ஒளிராத பெயர்ப்பலகை விளக்கு
ADDED : பிப் 06, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர், : மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ளது. இந்த நகராட்சி கட்டடத்தின் மேல்தளத்தில், மறைமலை நகர் நகராட்சி என்ற பெயர்ப்பலகையும், அதன் அருகில் தமிழ் வாழ்க என்ற பலகையும் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பலகைகளிலும், இரவில் ஒளிரும் வகையில் விளக்குகள் அமைத்து, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த பெயர்ப்பலகையில் உள்ள விளக்குகள் சரியாக எரியாமல் விட்டு விட்டு எரிகின்றன. எனவே, இந்த மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.