/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் சீரமைக்க கோரிக்கை
/
சேதமான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் சீரமைக்க கோரிக்கை
சேதமான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் சீரமைக்க கோரிக்கை
சேதமான மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2025 02:08 AM

அச்சிறுபாக்கம்:நெடுங்கல் ஊராட்சியில் சேதமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சியில், ஒருங்கிணைந்த மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் உள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், தற்போது சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், கட்டடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பலமுறை, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பெண்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
தற்காலிகமாக, சேவை மைய கட்டடத்தில், மகளிர் சுய உதவி குழு செயல்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், சேதமான மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தை, இடித்து அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மகளிர்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.