ADDED : ஜூலை 25, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி, வடபழனி, ரங்கப்பா நாயுடு சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் கஞ்சா விற்பனை நடப்பதாக, பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு நடந்த சோதனையில், மதுரையைச் சேர்ந்த கார்த்திக், 45, மதுரவாயலைச் சேர்ந்த கலைச்செல்வன், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ஏற்கனவே, தாம்பரம், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை வழக்கு இருப்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 கிலோ கஞ்சா மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.