ADDED : ஜூலை 25, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், டி.பி., சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 49. இவர், அண்ணா நகர் முதல் அவென்யூ சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்று மது போதையில் வந்த ஆட்டோ ஓட்டுனர், சாப்பிட்டு சென்று கொண்டிருந்தார்.
சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டபோது, சவுந்தர்ராஜனை சரமாரியாக தாக்கி தப்பினார். காயம் அடைந்தவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுகுமார், 53, என்பவரை கைது செய்து, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.