/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சபல வாலிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது
/
சபல வாலிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:15 AM

சென்னை,:அம்பத்துார், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 34; தனியார் நிறுவன ஊழியர். இவர், 'ஆன்லைன்' செயலி வாயிலாக, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வினோத், 21, என்ற வாலிபரை தொடர்பு கொண்டு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
அதன்படி, வினோத் மேனாம்பேடு அணுகு சாலை அருகே உள்ள காலிமைதானத்திற்கு வருமாறு, வசந்தகுமாரை அழைத்துள்ளார். அங்கு, வினோத் தன் கூட்டாளிகளான பெரம்பூரைச் சேர்ந்த வசந்த், 22, மேனாம்பேடு பகுதியை, சேர்ந்த ராஜா, 21, கருக்கு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 19, ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார்.
அங்கு வந்த வசந்தகுமாரை, நால்வரும் சேர்ந்து அடித்து உதைத்து, மொபைல் போனை பறித்துக் கொண்டனர். வங்கி கணக்கில் இருந்த 57,500 ரூபாயையும், தன் வங்கி கணக்கிற்கு வினோத் மாற்றி உள்ளார். அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார், அம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று வினோத், வசந்த், ராஜா, சந்தோஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.