ADDED : ஜூன் 01, 2024 12:38 AM
சென்னை, மீன்வளத்துறையில், 24 தற்காலிக பல்நோக்கு சேவை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் 24 தற்காலிக பல்நோக்கு சேவை பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. விண்ணப்பதாரர்கள். மீன்வளம் அறிவியல், கடல் உயிரியல் உள்ளிட்ட படிப்பில், முதுகலை மற்றும் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இல்லாத பட்சத்தில் பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், நன்கு தமிழ் தெரிந்த, 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விரும்பமுள்ளவர்கள், ராயபுரத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில், ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 93848 24245, 93848 24407 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.