/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநங்கைக்கு குடிகார கணவர் கொடுமை
/
திருநங்கைக்கு குடிகார கணவர் கொடுமை
ADDED : ஜூலை 06, 2024 12:31 AM

கொடுங்கையூர், கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் என்கிற மணிமேகலை, 32; திருநங்கை. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், குமரேசன் என்பவருடன் திருமணமானது.
இந்நிலையில், குமரேசன் குடித்து விட்டு வந்து, மணிமேகலையுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.
வழக்கம்போல், நேற்று முன்தினம் நள்ளிரவு குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதிகாலையில் சண்டை முற்றி, மணிமேகலையை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மணிமேகலை, வீட்டின் அறையில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி, கொடுங்கையூர் போலீசார் வந்து மணிமேகலை உடலை நேற்று மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து வழக்கு பதிந்து குமரேசனிடம் விசாரிக்கின்றனர்.