ADDED : ஜூலை 06, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், டி.எஸ்.எச்.எல்., எனும் தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் போட்டி, சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் இன்று துவங்குகிறது.
இப்போட்டிக்காக 306 பள்ளிகளில் இருந்து, 5,508 மாணவர்கள், 600 பயிற்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம், 45 இடங்களில் 500க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடக்கின்றன.
இதில் வெற்றி பெறும் அணிகள், 6 - 7 மாவட்டங்களாக இணைந்து, ஒரு மண்டல போட்டியாக நடத்தப்படும்.
மண்டல போட்டியில் வெற்றி பெறும் அணிகளை ஒன்றிணைத்து, மாநில அளவிலான போட்டிகள், சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இத்தகவலை தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சேகர் மனோகர் தெரிவித்தார்.