/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்
/
பார்வையற்ற மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 28, 2024 01:08 AM

சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், இலவச பல் பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த முகாமில், 100 மாணவர்கள் மற்றும் 35 ஆசிரியர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனையின் ஈறுநோய் சிகிச்சை மற்றும் இம்பிப்ளான்டோலஜி பிரிவு தலைவர் டாக்டர் ஜெய்தீப் மகேந்திரா கூறியதாவது:
வாய்வழி பாதிப்பால், பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. வாய்வழி சுகாதாரம் குறித்து, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவ கல்லுாரி மாணவர்கள், திருநங்கையர், திருநம்பியருக்கு, பல் மற்றும் ஈறு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.