/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சங்க அலுவலகத்திற்கு தீ வைத்த நபர் கைது
/
சங்க அலுவலகத்திற்கு தீ வைத்த நபர் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், 3வது பிரதான சாலையில், சென்னை பெருநகர சுமை பணி தொழிலாளர் சங்கம், 150 சதுரடியில் உள்ளது. தென்னை ஓலையால் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், சங்க அலுவலகத்திற்கு மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தகவலறிந்து கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 37, என்பவர் குடிபோதையில் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.