/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீரர்களுக்கு இலவச சிகிச்சை 'ரேலா'வில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
வீரர்களுக்கு இலவச சிகிச்சை 'ரேலா'வில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வீரர்களுக்கு இலவச சிகிச்சை 'ரேலா'வில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வீரர்களுக்கு இலவச சிகிச்சை 'ரேலா'வில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 29, 2024 01:34 AM
குரோம்பேட்டை:இளம் விளையாட்டு வீரர்களுக்கு, உத்வேகம் அளிக்கும் நல்ல முயற்சியை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.
இதற்காக, அபினவ் பிந்த்ரா பவுண்டேஷன் மற்றும் எஸ்.ஓ.ஏ.ஆர்., டிரஸ்ட் உடன், இம்மருத்துவமனை நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
ரேலா மருத்துவமனையின் தலைமை பேராசிரியர் டாக்டர் ரேலா கூறியதாவது:
ஒப்பந்தத்தின்படி, விளையாட்டு போட்டிகளில் காயமடையும் வீரர்களுக்கு, ரேலா மருத்துவமனை இலவச சிகிச்சை அளிக்கும்.
எலும்பியல், முதுகுத்தண்டு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிகிச்சைக்கு, 'ஸ்பைன் அண்டு ஆர்த்தோபெடிக்ஸ் ஆக்ஷன் அண்டு ரீசர்ச் டிரஸ்ட்' நிதி வழங்கும்.
விளையாட்டு காயங்கள் தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கு, புதிய வைப்பு சாதனங்களை, அபினவ் பிந்த்ரா பவுண்டேஷன் வழங்கும்.
ரேலா மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம், இளம் விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் பயனளிக்கும்.
பள்ளி, கல்லுாரி அல்லது ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயில்வோர், அதற்கான சான்றை சமர்ப்பித்து இச்சேவையை பெறலாம்.
இதன் வாயிலாக, உலக விளையாட்டு அரங்கில், புதிய சிகரங்களை நம் வீரர்கள் எட்டி, சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர்கூறினார்.