/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடையின்றி பால் வினியோகம் 'ஆவின்' நிறுவனம் ஏற்பாடு
/
தடையின்றி பால் வினியோகம் 'ஆவின்' நிறுவனம் ஏற்பாடு
ADDED : ஜூலை 29, 2024 01:34 AM
சென்னை:'அம்பத்துார் பால் பண்ணையில், பராமரிப்பு பணி நடந்தாலும், பொதுமக்களுக்கு இடையூறின்றி பால் வினியோகிக்க, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என, ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சென்னை, புறநகர் பகுதிகளில், 15 லட்சம் லிட்டர் பால், சில்லரை விற்பனையாளர்கள், பணிமனைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் வழியே, ஆவின் நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் முதல், அம்பத்துார் பால் பண்ணையில் பராமரிப்பு பணி துவக்கப்பட்டு, 20 நாட்கள் நடக்க உள்ளது. இதனால், பால் உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள மற்ற பால் பண்ணைகள் மற்றும் பாடாலுார் பால் பண்ணையில் இருந்து, 1.50 லட்சம் லிட்டர் பால், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு வினியோகிக்கப்படும்.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பால் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.