/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்வழித்தடம் சீரமைப்பு இல்லாததால் நாயக்கர் குளம் புதர்மண்டிய அவலம்

ADDED : ஜூலை 15, 2024 01:38 AM

மடிப்பாக்கம், அம்பேத்கர் சாலை, சிவா விஷ்ணு கோவில் பின்புறம், 4,000 சதுர அடியில் நாயக்கர் குட்டை குளம் உள்ளது.
சீரழிந்து காணப்பட்ட இக்குட்டை குளத்தை, தன்னார்வலர்களை கொண்டு நம் நாளிதழ் முன்னெடுத்த 'நமக்கு நாமே' திட்டத்தால் பயனடைந்தது. சென்னை மாநகராட்சியும், 88.57 லட்சம் ரூபாய் நிதியில் இக்குளம் 2020ல் சீரமைத்தது.
குளத்தை துார்வாரி, கரைகளை அமைத்து, பக்கவாட்டில் கருங்கற்கள்பதிக்கப்பட்டன. கரையில் நடைபாதை, இருக்கைகள் அமைக்கப்பட்டன. தொடர் மழை பெய்தால், மழைநீர் இந்த குளத்தில் சேகரமாகவும் வழி செய்யப்பட்டது.
சில ஆண்டுகளாக இந்த குளம், மாநகராட்சியால் பராமரிக்கப்படவில்லை. இதனால், குளத்தில் கோரைப் புற்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.
அதில், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்து வருவதால், நடை பயிற்சி செய்வோரும், அந்த குளத்திற்கு வந்து செல்வது குறைந்துபோனது.
நீர்வழித்தடம் சீரமைக்காததால், சமீப நாட்களாக பெய்த மழைகூட, குளத்தில் சேகரமாகவில்லை. பருவமழைக்கு முன் நாயக்கர் குட்டை குளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.