/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கீத கோவிந்த மண்டலியில் ராதா கல்யாண வைபவம்
/
கீத கோவிந்த மண்டலியில் ராதா கல்யாண வைபவம்
ADDED : ஜூலை 28, 2024 12:48 AM
சென்னை, பெரம்பூர், பாரதி சாலையில், ஸ்ரீ கீத கோவிந்த மண்டலி இயங்கி வருகிறது. அதன் சார்பில், 49ம் ஆண்டு ராதா கல்யாண வைபவம், பெரம்பூர் அய்யப்பன் கோவில், சுகுமாரம் அரங்கில் நேற்று காலை, வசந்த மாதவ பூஜையுடன் துவங்கியது. பின், சம்ரதாய பஜனை, தோடய மங்களம், குருதியானம் ஆகியவற்றை கான்பூர் மகாதேவ பாகவதர் நிகழ்த்தினார்.
தொடர்ந்து, அஷ்டபதி பஜனையை டில்லி சங்கர் பாகவதர் குழுவினர் நிகழ்த்தினர். இரவு, சங்கர டோலோற்சவம் நடந்தது.
விழாவின் நிறைவு நாளான இன்று காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி நடக்கிறது. தொடர்ந்து ராதா கல்யாண வைபத்தை வெங்கடரமணன், கல்யாணராமன், ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் பாகதவர்கள் குழுவினர் நிகழ்த்துகின்றனர். மதியம் 12:30 மணிக்கு திருமாங்கல்யதாரணம் மஹா தீபாராதனை நடக்கிறது.