/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லறை சாலையில் கழிவுநீர் அரைகுறை பணியால் அவதி
/
கல்லறை சாலையில் கழிவுநீர் அரைகுறை பணியால் அவதி
ADDED : ஜூலை 15, 2024 02:06 AM

கீழ்ப்பாக்கம்,:கல்லறை சாலையில், குடிநீர் வாரியத்தின் அரைகுறை பணியால், சுடுகாட்டின் கழிப்பறை செல்லும் குழாய் உடைந்து, குடியிருப்பில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் பகுதியில், பழைய பேருந்து நிலையம் அருகில், கல்லறை சாலை உள்ளது.
இச்சாலையில், சென்னை மாநகராட்சியின் கிறிஸ்துவ கல்லறை மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இச்சாலையில், பல்துறை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, பல ஆண்டுகளாக சாலை படுமோசமாக காட்சியளிக்கிறது.
சமீபத்தில் குடிநீர் வாரியத்தால், ராட்சத குழாய் அமைக்கும் பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின், முறையாக சாலையை சீரமைக்கவில்லை.
தற்போது, தொடர் மழை காரணமாக, கல்லறை சாலை முழுதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், குடியிருப்பில் வசிப்பவர்கள், கல்லறைக்கு உடல்களை புதைக்க வரும் பொதுக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், கல்லறையின் கழிப்பறைக்கு செல்லும் குழாய் சேதமடைந்தது. இதனால், கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, அரைகுறை பணிகளை சீரமைத்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.