/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை நாசம்; கழிவுநீர் தேக்கம் நெடுஞ்சாலை துறை சாலை அலங்கோலம்
/
நடைபாதை நாசம்; கழிவுநீர் தேக்கம் நெடுஞ்சாலை துறை சாலை அலங்கோலம்
நடைபாதை நாசம்; கழிவுநீர் தேக்கம் நெடுஞ்சாலை துறை சாலை அலங்கோலம்
நடைபாதை நாசம்; கழிவுநீர் தேக்கம் நெடுஞ்சாலை துறை சாலை அலங்கோலம்
ADDED : ஜூலை 15, 2024 02:07 AM

அய்யப்பன்தாங்கல்:அய்யப்பன்தாங்கல் அருகே மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபாதை உடைந்தும், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலந்தும், பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.
பூந்தமல்லி மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் நகரின் பிரதான சாலையாக, மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை ஆகியவை உள்ளன.
அய்யப்பன்தாங்கல் அருகே இந்த நடைபாதை முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து, அதில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்துள்ளன.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் முறையான பராமரிப்பின்றி, கழிவுநீர் செல்லும் பாதையாக மாறியுள்ளது.
இதனால் அடிக்கடி, மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி வருகிறது.
அத்துடன், மின் இணைப்பு பெட்டிகள் மற்றும் மின்வடங்கள் மழைநீர் வடிகால் அருகே, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.
மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என நெடுஞ்சாலை துறையும், நெடுஞ்சாலை துறை சாலையில் நாம் ஏன் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என, மெட்ரோ ரயில் நிர்வாகமும் நழுவி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.