/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்தல் மேலும் ஒருவர் கைது
/
போதை பொருள் கடத்தல் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மாநகர போலீசில் செயல்படும், ஏ.என்.ஐ.யு., எனப்படும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார், இந்த ஆண்டு, ஜன., 25ல், சூளைமேடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மெத் ஆம்பெட்டமைன், கோகைன், கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை பொருள் கடத்திய இரண்டு பேரை கைது செய்தனர்.
அதன் பின், நைஜீரியர்கள் உட்பட, 14 பேரை, அதே வழக்கில் கைது செய்தனர். தொடர் விசாரணை நடத்தி, அடுத்தடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 32, என்பவர், 24வது நபராக, நேற்று கைது செய்யப்பட்டார்.