/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செஞ்சிலுவை சங்க தேர்தல் வேட்புமனு
/
செஞ்சிலுவை சங்க தேர்தல் வேட்புமனு
ADDED : ஜூன் 01, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை கலெக்டர் ரஷ்மி சிததார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை ஆண்டு பொதுக்கூட்டம், ஜூன் 21 காலை, 9:30 மணிக்கு, சிங்கார பிள்ளை பள்ளியில் நடக்கிறது.
கூட்டத்தில் பங்கேற்போர், தங்கள் உறுப்பினர் அட்டை, பணம் செலுத்திய ரசீது தவறாமல் கொண்டு வரவேண்டும்.
நிர்வாகக்குழு உறுப்பினர் பதவி தேர்தலில் போட்டியிடுவோர், தங்கள் வேட்பு மனுவை, ஜூன் 4, 5ல், சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கலாம்.
வேட்புமனு பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல், ஜூன் 7ல் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.