/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியின்றி விடுப்பு எடுத்த பணியாளர்களிடம் விளக்கம் கேட்பு
/
அனுமதியின்றி விடுப்பு எடுத்த பணியாளர்களிடம் விளக்கம் கேட்பு
அனுமதியின்றி விடுப்பு எடுத்த பணியாளர்களிடம் விளக்கம் கேட்பு
அனுமதியின்றி விடுப்பு எடுத்த பணியாளர்களிடம் விளக்கம் கேட்பு
ADDED : ஜூன் 01, 2025 09:56 PM
சென்னை:ஏப்., மே மாதங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுப்பு எடுத்ததால், பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழக இயக்க பிரிவுக்கான பொது மேலாளர், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
ஏப்., 21 முதல், மே, 20 வரையிலான ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வருகை பதிவை ஆய்வு செய்ததில், ஆறு நாட்களுக்கு மேல் பலர் விடுப்பு எடுத்துள்ளனர்.
முன் அனுமதி இன்றி தொடர் விடுப்பு எடுத்த பின், பணிக்கு வரும் ஓட்டுனர்கள், நடத்துனர்களிடம், தங்களின் ஒரு நாள் விடுப்பால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசவுகரியம் தொடர்பாக, கிளை மேலாளர்கள், எவ்வித அறிவுறுத்தலும் அவர்களுக்கு வழங்கவில்லை என தெரிகிறது.
தவிர, நிறைய பேருந்துகள் 'நாட்ரன்' முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
எனவே, ஏப்., 21 முதல் மே 20 வரையிலான காலத்தில், ஆறு நாட்கள் வரை ஓட்டுனர், நடத்துனர்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதித்தது குறித்து உரிய விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.